
செவ்வாய் கிரகத்தில் ரத்தினக் கற்கள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
செவ்வாயில் ரத்தினக் கற்களுடன் தொடர்புடைய கனிமங்கள் கண்டுபிடிப்பு.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் ‘பெர்சிவிரன்ஸ்’ ரோவர், முக்கியமான கனிமக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவிரன்ஸ் ரோவர், தற்போது ஜெஜீரோ கிரேட்டர் பகுதியில் ஆய்வு செய்து வருகிறது.
அங்கு ஒரு பாறையின் மீது தனது லேசர் கருவியைப் பயன்படுத்தி ரோவர் மேற்கொண்ட ஆய்வில், பூமியில் காணப்படும் ரத்தினக் கற்களுடன் தொடர்புடைய கனிமங்கள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாயின் பாறைகளில் ஏற்பட்ட பிளவுகள் வழியாக சூடான நீர் பாய்ந்தபோது இந்தக் கனிமங்கள் உருவாகியிருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாயில் ஒருகாலத்தில் நீர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வில், இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விசேட பாடசாலை விடுமுறை
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்கு உட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
ISRO சந்திரயான்-4 திட்டம்: நிலவில் மனிதர்கள் தரையிறக்கம் இலக்கு
இந்தியாவின் மிக முக்கியமான விண்வெளி திட்டமான சந்திரயான்-4 குறித்த விரிவான தகவல்கள்.
புதிய புற்றுநோய் மருந்து: இந்திய விஞ்ஞானிகளின் திருப்புமுனை கண்டுபிடிப்பு
IIT மெட்ராஸ் விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான புதிய மருந்தை கண்டறிந்துள்ளனர்.
காலநிலை மாற்றம்: கடல் மட்ட உயர்வு குறித்த புதிய ஆய்வு முடிவுகள்
அடுத்த 50 ஆண்டுகளில் கடல் மட்ட உயர்வு 30 செ.மீ. ஆக இருக்கும் என கணிப்பு.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.


