சுவிஸ்: 11°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

பிலிப்பைன்சில் நடுவானில் விமானங்கள் மோதல் – 4 விமானிகள் பலி!

சுமி•24 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பிலிப்பைன்சில் நடுவானில் விமானங்கள் மோதல் – 4 விமானிகள் பலி!

பிலிப்பைன்சில் நடுவானில் விமானங்கள் மோதல் – 4 விமானிகள் பலி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்சியின்போது இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்ட விபத்தில், நான்கு விமானிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் மணிலாவுக்குத் தெற்கே உள்ள படாங்காஸ் மாகாணத்தின் லிபா நகரில், பெர்னாண்டோ விமானப்படை தளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எஸ்.எஃப்.-260 ரகத்தைச் சேர்ந்த இரண்டு பயிற்சி விமானங்களும் எதிர்பாராதவிதமாக நடுவானில் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் இருந்த நான்கு விமானிகளும் உயிரிழந்தனர். விமானங்கள் விமானப்படை தளத்தின் எல்லைக்குள்ளேயே விழுந்ததால், தரையில் இருந்த வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எஸ்.எஃப்.-260 ரக விமானங்களின் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

திபெத்தில் சீனா கட்டும் மெகா அணை: இந்தியாவின் நீர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டத் திட்டமிட்டுள்ள பிரமாண்ட நீர்மின் திட்ட அணையினால், இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயமும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்களே எச்சரித்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேட்டோ பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை வெளியிடுகிறது பிரித்தானியா!

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புச் செலவு இலக்குகளை எட்டுவதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வெளியிடவுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமித் ஷா தொடர்பான அவதூறு வழக்கிலிருந்து ராகுல் காந்தி விடுதலை!

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 2018-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (26) விடுதலை செய்யப்பட்டார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனடா இராணுவத்தில் புதிய F-35 போர் விமானங்கள் இணைப்பு

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன F-35 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஆலோசனைகளில் கனட அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இரண்டு புதிய F-35 போர் விமானங்களைக் கனடா பெற்றுக்கொண்டுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm