சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

இந்திய அரசு அலுவலகங்களில் இனி மின்சார கார்கள் மட்டுமே கட்டாயம்!

VIGNESWARAN ABIRAMY•12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இந்திய அரசு அலுவலகங்களில் இனி மின்சார கார்கள் மட்டுமே கட்டாயம்!

இந்திய அரசு அலுவலகங்களில் இனி மின்சார கார்கள் மட்டுமே கட்டாயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்திய மத்திய அரசு ஊழியர்களின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு இனி மின்சார கார்களே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என மத்திய நிதி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கார்பன் உமிழ்வு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், இந்திய மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மொத்த கார்பன் உமிழ்வில் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 சதவீதமாக உள்ளது.

இதன்படி, மத்திய அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளில் தற்போதுள்ள பெட்ரோல், டீசல் கார்கள் மாற்றப்படும்போது, அவற்றுக்குப் பதிலாக மின்சார கார்களையே வாங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் உச்சவரம்பு 20 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் பெட்ரோல் அல்லது டீசல் கார்களை வாங்க விரும்பும் துறைகள், மத்திய செலவினத் துறையிடம் விசேட அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm