
கனடாவில் மாட்டிறைச்சி சமைத்த விவகாரம் – இந்திய வம்சாவளி பெண் கைது குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கனடாவின் சர்ரே பகுதியில், வீட்டை வாடகைக்கு விட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண், வாடகைதாரருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடகைதாரர் வீட்டின் பின்புறத்தில் மாட்டிறைச்சியை பார்பிக்யூ கிரில்லில் சமைத்ததாகவும், இதனால் சுவரில் கறை படிவதாகக் கூறி ராஜ் திவானா அதைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ராஜ் திவானா உணவை மரக்கட்டையால் தட்டியதுடன், கல் வீசி தாக்கியதாக வாடகைதாரர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், வீட்டின் பூட்டுகளை மாற்றியதோடு முன்பக்கக் கதவையும் அகற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ ஆதாரங்களும் போலீசாரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சர்ரே போலீசார் ராஜ் திவானாவை கைது செய்துள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவம் மாட்டிறைச்சி சமைத்தது தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல என்றும், வீட்டு உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையே ஏற்கனவே நீடித்து வந்த தனிப்பட்ட தகராறே முக்கிய காரணம் என்றும் கனடா ஊடகங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அக்கினி
ஆசிரியர் குழுஅக்கினி செய்திகள் ஆசிரியர் குழு
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஹெஸ்பொல்லா ராணுவப் பிரிவுக்குத் தடை: லெபனான் அரசு அதிரடி உத்தரவு!
லெபனான் நாட்டில் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் அனைத்து விதமான ராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு செயல்பாடுகளுக்கும் உடனடியாகத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!
2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!
பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




