
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் கியனேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் நேற்று (04) மும்பையில் கூட்டாகப் போராட்டப் பேரணியை நடத்தினர்.
‘விராட் கர்ஜனா மோர்ச்சா’ (பெரும் கர்ஜனைப் பேரணி) என்று பெயரிடப்பட்ட இந்தப் பேரணி, தெற்கு மும்பையில் உள்ள மெட்ரோ சினிமா பகுதியிலிருந்து தொடங்கி, பிரஹன்மும்பை மாநகராட்சித் தலைமையகத்தை நோக்கிச் செல்லும் வகையில் அமைந்திருந்தது. படங்களைப்பார்
காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி (எஸ்பி) ஆகியவற்றின் மாநிலத் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியலின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த’ (SIR) நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




