சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

கடுமையான வங்கி நிதி நெருக்கடி: பராகுவே நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா திடீர் ராஜினாமா!

VIGNESWARAN ABIRAMY•6 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு1
பகிர்க:WhatsAppFacebook
கடுமையான வங்கி நிதி நெருக்கடி: பராகுவே நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா திடீர் ராஜினாமா!

கடுமையான வங்கி நிதி நெருக்கடி: பராகுவே நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா திடீர் ராஜினாமா! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பராகுவே நாட்டில் ஏற்பட்ட கடுமையான வங்கி நிதி நெருக்கடி மற்றும் முறைகேடுகள் காரணமாக, அந்த நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா (Santiago Peña) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பராகுவேயில் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான 'ுயேனோ' (Ueno) வங்கி திடீரென வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலட்சக்கணக்கான மக்கள் தங்களது சேமிப்புப் பணத்தை மீளப் பெற முடியாத கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

இதனைத் தொடர்ந்து நாட்டில் வெடித்த தீவிர மக்கள் போராட்டம் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக அதிபர் சான்டியாகோ பெனா தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.  நாட்டின் ஸ்திரத்தன்மையை மற்றும் சமூக அமைதியைப் பேணிக் பாதுகாக்கும் பொருட்டே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நாட்டின் தற்காலிக அதிபராக துணை அதிபர் பெட்ரோ அலியானா (Pedro Alliana) பதவியேற்பார் எனவும், அவர் 2028 ஆம் ஆண்டு வரை எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm