270 உயிர்களை மீட்கப் போராட்டம்: வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் கப்பல் கோர விபத்து!

270 உயிர்களை மீட்கப் போராட்டம்: வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் கப்பல் கோர விபத்து! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பயணிகளுடன் சென்ற சொகுசுக் கப்பல் ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பயணிகளுடன் சென்ற சொகுசுக் கப்பல் ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கோரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடனேயே, சைப்ரஸ் மற்றும் துருக்கியே கடலோரக் காவல் படையினர் விரைந்து செயல்பட்டு, நடுவானில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்துப் படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை பல பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்
எனினும், பகுதியில் வீசும் பலத்த காற்று மற்றும் அலைகளின் சீற்றம் காரணமாக மீட்புக் குழுவினர் கடும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எஞ்சிய பயணிகளையும் விரைவாக மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதோடு, விபத்துக்கான துல்லியமான காரணங்கள் குறித்து கடற்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குரு
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!
ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




