
தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார். குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தொலைக்காட்சித் திரைகளில் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்பித்த அந்தக் குரல்....தமிழோடு சிரிக்க வைத்த, தமிழோடு சிந்திக்கவைத்த அந்த வசீகரக் குரல்…இன்று மௌனமாகிவிட்டது.! தமிழறிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90
மதுரை மண்ணில் பிறந்து, தமிழைத் தனது உயிர்மூச்சாகக் கொண்டு, “அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…” என்ற வசீகரக் குரலால் தலைமுறைகளை ஈர்த்தவர்.பட்டிமன்றத்தை அரங்குகளுக்குள் மட்டும் நிறுத்தாமல், பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றவர். திருக்குறளையும், சங்கத் தமிழையும் எளிய நகைச்சுவையோடு மக்களின் மனதில் விதைத்தவர்.
தொலைக்காட்சிகளின் வழியாக உலகத் தமிழர்களைச் சென்றடைந்த அவரது குரல், ஒரு தலைமுறையின் நினைவுகளோடு என்றும் வாழும்.
பேச்சாளர்… தமிழறிஞர்… நடிகர்…எத்தனை அடையாளங்கள் இருந்தாலும்-பாப்பையா” என்ற பெயரே ஒரு தமிழ் அடையாளம்!
இன்று அந்த வசீகரக் குரல் ஓய்ந்துவிட்டது…ஆனால், அவர் பேசிய தமிழ்…அவர் விதைத்த சிந்தனை…அவர் விட்டுச் சென்ற நினைவுகள்…என்றென்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். தமிழின் மகுடத்தில் ஒரு நட்சத்திரம் மறைந்திருக்கலாம்…
ஆனால், சாலமன் பாப்பையா என்ற தமிழ் குரல் என்றும் மறையாது. சாலமன் பாப்பையாவின் குரலும் நினைவுகளும் வாழும்.
அன்னாரது மறைவுக்கு அக்கினி FM சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகள்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
ஆன்மீகக் களத்தில் இறங்கும் ரவி மோகன் : வெளியானது புதிய படத்தின் போஸ்டர்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் , தனது அடுத்த திரைப்படத்தில் கடவுள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ‘சேயோன்’: வெற்றிகரமாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘மண்டாடி’ திரை விமர்சனம்: சீறிப்பாயும் படகுப் போட்டி... வெற்றிக் கரை சேர்ந்தாரா சூரி?
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள விளையாட்டுச் சார்ந்த திரில்லர் திரைப்படம் ‘மண்டாடி’. கடலையும் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய 'சரிகம' மனு!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக ‘சரிகம’ = நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




