சுவிஸ்: 6°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சினிமா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய 'சரிகம' மனு!

நிவேதினி•10 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய 'சரிகம' மனு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இளையராஜாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய 'சரிகம' மனு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக ‘சரிகம’ = நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக ‘சரிகம’ = நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘சரிகம’ நிறுவனத்திற்குச் சொந்தமான காப்புரிமை பெற்ற பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, பிறருக்கு உரிமம் வழங்கவோ அல்லது உரிமை கோரவோ கூடாது என கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்தபோதிலும், ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் குறிப்பிட்ட பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகவும், மூன்றாம் தரப்பினரிடம் பாடல்களுக்கான உரிமையைக் கோரியதாகவும் 'சரிகம' குற்றம் சாட்டியுள்ளது.

நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதற்காக இளையராஜாவை சிறையில் அடைக்க வேண்டும், அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய அதிகாரியை நியமித்து அதை விற்பனை செய்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த அவமதிப்பு மனுவை விசாரித்த நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி, இது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே காப்புரிமை தொடர்பான சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 'சரிகம' நிறுவனத்தின் இந்த புதிய நடவடிக்கை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#சினிமா
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

விஜய் சேதுபதியின் வரிகளில் 'இருவர்' ஆல்பம்: நிவாஸ் கே. பிரசன்னா இசையில் வெளியானது பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடலாசிரியராக அவதாரமெடுத்துள்ள 'இருவர்' சுயாதீன ஆல்பம் பாடலின் லிரிக்கல் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியானது!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நவம்பர் 15 முதல் ஆரம்பம்: கேரள அரசின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வழிநடத்துகிறார் மம்மூட்டி!

கேரள மாநிலத்தில் வீதி விபத்துகளைத் தடுத்து, உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய 'சாலை பாதுகாப்பு மிஷன்' தொடக்கம்! திட்டத்தின் பிராண்ட் தூதராகப் பிரபல நடிகர் மம்மூட்டி நியமனம்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ராமாயணா பாகம் 1 திரை விமர்சனம்: ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்ட இதிகாசம்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா பாகம் 1' படத்தின் திரை விமர்சனம்!

5 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சூர்யாவின் பட வாய்ப்பை மூன்று முறை மறுத்த நஸ்ரியா: நான்காவது முயற்சியில் இணைந்த சுவாரஸ்யம்!

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்க நஸ்ரியா முந்தைய வாய்ப்புகளை மறுத்தது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm