சுவிஸ்: 16°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் மாயம், 8 பேர் காயம்!

நிவேதினி•23 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் மாயம், 8 பேர் காயம்!

சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் மாயம், 8 பேர் காயம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

சுவிட்சர்லாந்தில் உணவகம் மற்றும் குடியிருப்புகள் அமைந்திருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் காணாமல் போயுள்ளனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உணவகம் மற்றும் குடியிருப்புகள் அமைந்திருந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் காணாமல் போயுள்ளனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர்.


சுவிட்சர்லாந்தின் கிழக்குப்பகுதியில் உள்ள கிராபியுன்டன் மாகாணத்தின் டுசிஸ் நகரில், கீழ் தளத்தில் உணவகமும் மேல் தளங்களில் குடியிருப்புகளும் கொண்ட கட்டடத்தில் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


கட்டிடத்தின் படிக்கட்டுகள் முற்றிலும் இடிந்து விழுந்ததால், ஹெலிகாப்டர் மற்றும் கிரேன் உதவியுடன் கூரையைப் பிரித்துத் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்த கட்டடம் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.


கட்டடத்திலிருந்த 14 பேர் தப்பிய நிலையில், 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  


மாயமான 5 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அந்நாட்டு காவல்துறையினரும் அரசு வழக்கறிஞர் அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க பிராந்திய சங்கங்களை இணைக்கிறது சுவிட்சர்லாந்தின் 'மிக்டோஸ்' நிறுவனம்!

சுவிட்சர்லாந்தின் முன்னணி பல்பொருள் அங்காடிக் குழுமமான 'மிக்டோஸ்' (Migros), தனது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், பிராந்திய கூட்டுறவுச் சங்கங்களை ஒன்றாக இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பெலாரஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்கு: சுவிஸ் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

பெலாரஸ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்ட (Enforced Disappearance) விவகாரத்தில், அந்நாட்டின் முன்னாள் சிறப்புப் படை அதிகாரியான யூரி கராவுஸ்கி (Yuri Garavsky) குற்றவாளி என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

போலியான தகவல்கள் குறித்து கவலை அடையும் சுவிஸ் மக்கள் – புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் பரவி வரும் தவறான மற்றும் போலியான தகவல்கள் (Disinformation) குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளதாக புதிய சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இணைய உலகில் பரவும் பொய்ச் செய்திகள் ஜனநாயக அமைப்பிற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதாக சுவிஸ் மக்கள் கருதுகின்றனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நைஜீரியாவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட சுவிஸ் பெண்மணி சிறப்பு விமானம் மூலம் தாயகம் மீட்பு!

நைஜீரியாவில் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெண்மணி, நைஜீரிய தலைநகர் அபுஜாவிலிருந்து (Abuja) சிறப்பு மருத்துவ விமானம் மூலம் சுவிட்சர்லாந்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நைஜீரியாவில் பதிவான ஒரே எபோலா நோயாளி இவராவார்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm