சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

ஆகாஷ்•4 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக மாயமானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அதிகாரிகளின் சமீபத்திய தகவலின்படி, வெளிநாட்டினர் உட்பட 5,083 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,280-ஐ நெருங்கியுள்ளது.

ரசுவா, நுவாகோட், தாடிங் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரசுவா மாவட்டத்தில் 4 பள்ளிகளும், நுவாகோட் மாவட்டத்தில் 8 பள்ளிகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மேலும், 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல் கிடைக்காததால் அவர்களின் பெற்றோர் கவலையில் உள்ளனர். தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் காணாமல் போனவர்களின் நிலையை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
ஆகாஷ்

ஆகாஷ்

முதன்மை ஆசிரியர்

அக்கினி செய்திகளின் முதன்மை நிருபர். சர்வதேச செய்திகள், அரசியல் பகுப்பாய்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்த கள ஆய்வு கட்டுரைகளை வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm