சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

புலிகள் மீளுருவாக்கச் சதி வழக்கு: இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை.

VIGNESWARAN ABIRAMY•25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
புலிகள் மீளுருவாக்கச் சதி வழக்கு: இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை.

புலிகள் மீளுருவாக்கச் சதி வழக்கு: இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை. குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அஸ்மின் என்ற இலங்கைப் பிரஜைக்கு, இந்தியாவின் கேரள உயர்நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளான ராஜா விஜயராகவன் மற்றும் கே. வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றத்தினால் மன்னிப்பு வழங்கப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட குறித்த நபரைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  நீதிமன்றம் விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள்:

ஒரு இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பிணைப் பத்திரத்துடன், இரு நபர் உத்தரவாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.  

தற்போதைய முகவரி மற்றும் கைபேசி இலக்கத்தை என்.ஐ.ஏ விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும்.  

சிறப்பு நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி எர்ணாகுளம் மாவட்ட எல்லையை விட்டு வெளியேறக் கூடாது.

மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 11 மணி வரை எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டும்.

300 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருள், ஏ.கே-56 ரகத் துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சதித்திட்டம் அம்பலமானது. 

இதில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதுடன், 'ஹவாலா' முறை மற்றும் கிரிப்டோகரன்சி ஊடாகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக அஸ்மின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நேபாளப் பெருவெள்ளம் – 213 இந்தியர்கள் உட்பட 5,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்க நடவடிக்கை!

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன 213 இந்தியர்கள் உட்பட சுமார் 5,000 பேரை உயிரிழந்தவர்களாக அறிவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஏ.ஐ. முதலீட்டை அதிகரிக்க SAP நிறுவனம் 10,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டம்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த SAP, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களைப் பணியிடங்களில் இருந்து குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எர்டோகன் ஒப்புதல்; சவுதி பாதுகாப்பிற்குத் துருக்கி முழு ஆதரவு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm