சுவிஸ்: 7°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•9 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்: வெளியான முக்கிய அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இங்கிலாந்தில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இனி அந்நாட்டின் கரன்சி நோட்டுகளில் வரலாற்றுப் பிரபலங்களுக்குப் பதிலாக வனவிலங்குகள் இடம்பெற உள்ளதாக இங்கிலாந்து வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

புதிய நோட்டுகளில் இடம்பெறும் விலங்குகளைத் தேர்வு செய்வதற்காக இங்கிலாந்து வங்கி நடத்திய பொது மக்கள் கருத்துக் கணிப்பில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர். கரன்சி வடிவமைப்பு வரலாற்றில் இவ்வளவு அதிகமான மக்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை. 

தேர்வு செய்யப்பட்ட 4 விலங்குகள்:

மக்களின் அதிகப்படியான ஆதரவு மற்றும் வனவிலங்கு நிபுணர்களின் பரிந்துரைப்படி, கீழ்க்கண்ட நான்கு விலங்குகள் அடுத்தடுத்த நோட்டுகளின் மையப் படங்களில் இடம்பெறுகின்றன:  ஐரோப்பியhedgehog (European Hedgehog)  

 பார்ன் அவுல் (Barn Owl - ஒருவகை ஆந்தை)  

அட்லாண்டிக் பஃபின் (Atlantic Puffin - கடல் பறவை)  

 பஃப்-டெயில்ட் பம்பல்பீ (Buff-tailed Bumblebee - ஒருவகை தேனீ)   கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாணயத்தாள்களில் வின்ஸ்டன் சர்ச்சில், ஜேன் ஆஸ்டின், ஆலன் ட்யூரி போன்ற நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களின் உருவங்களே அச்சிடப்பட்டு வந்தன.

 தற்போது அந்த மரபு மாற்றப்பட்டு, நாட்டின் இயற்கை வளங்களையும் வனவிலங்குகளையும் போற்றும் வகையில் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த புதிய நாணயத்தாள்களிலும் மன்னரின் உருவப்படம் தொடர்ந்து இடம்பெறும் என்றும், கள்ளநோட்டுகளைத் தடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய டிசைன்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

கேள்வி கேட்ட பத்திரிகையாளரை உருவ கேலி செய்த டிரம்ப்!

செய்தியாளர் சந்திப்பில் தனியுரிமை தொடர்பான கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவ கேலி (Body Shaming) செய்து பேசிய சம்பவம் ஊடக உலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இராணுவ பலத்தை உயர்த்தும் வடகொரியா: ஏ.ஐ ட்ரோன்களை உருவாக்கத் தலைவர் கிம் உத்தரவு!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மற்றும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் நவீன ஆளில்லா விமானங்களை வடகொரியா தீவிரமாக உருவாக்கி வருகிறது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாடாளுமன்ற விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் அஞ்சுவது ஏன்? - அமித் ஷா பகிரங்கக் கேள்வி!

வாக்கு திருட்டு தொடர்பான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

உக்ரைனில் பயணிகள் இரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் பயணிகள் இரயில்கள் இரண்டை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm