வி.எஸ். பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் விஜய்!

வி.எஸ். பாபுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் விஜய்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உடல்நலக் குறைவால் காலமான தமிழ்நாடு கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு, முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபு, இன்று பிற்பகல் காலமானார். இதையடுத்து, சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பிறகு, வி.எஸ். பாபுவின் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




