வார இறுதி விடுமுறை: கொடைக்கானலுக்கு திரண்ட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்!

வார இறுதி விடுமுறை: கொடைக்கானலுக்கு திரண்ட ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வார இறுதி விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.
தற்போது அங்கு நிலவி வரும் மிதமான குளிர்ந்த காலநிலை, சாரல் மழை மற்றும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், கொடைக்கானலின் முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, படகு குழாம், குணா குகை, தூண் பாறை (Pillar Rocks) மற்றும் கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகளில் கடும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மேலும், வெள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் கொடைக்கானல் மலைப்பாதைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், உணவகங்கள், விடுதிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் யு.ஜி.சி (UGC) பிரதிநிதி அவசியம் எனத் தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரை!
தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி (UGC) பிரதிநிதியை இணைப்பது அவசியம் என முதலமைச்சர் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பரிந்துரைத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
தமிழக முதலமைச்சர் விஜய், தமது கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொளத்தூரில் மீண்டும் களம் காண்கிறாரா ஸ்டாலின்? - உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, குறித்த தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இத்தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




