மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? - எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி!

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? - எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் கூடிய தமிழக சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சம்பளங்கள் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை, மீட்பு பணிகள் துறை சார்ந்த மானிய கோரிக்கைகளின் மீதான விவாதங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பதிலுரை நிகழ்த்தினார்.
'' எதிர்க்கட்சிகள் போல் எனக்கு அரசியல் செய்ய விருப்பமில்லை. தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து பேரவையில் எதிர்க்கட்சிகள் வைக்கும் கருத்தை கூட மக்கள் மீது அவர்களுக்குள்ள கவலையை வெளிப்படுத்துவதாகவே இந்த அரசு எடுத்துக் கொள்கிறது.
மேலும் சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ 'எலும்பை உடைப்பேன்' என பேசியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ,இவ்வளவு நாட்களாக இதே மக்கள் தான் இவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். இதை போல் பேசி பேசி தான் சட்டப்பேரவையில் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றனர் மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும். என காட்டமான கருத்துக்களையும் பதிவு செய்தார்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
நடிகர் அஜித் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் விஜய்!
உலகப்புகழ் பெற்ற இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேசக் கார் பந்தயத் தொடரை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.
UP அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்வு – மாநில அரசு ஒப்புதல்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 70 ஆக உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டப்பேரவைச் சைகைக்கு விளக்கம்: தியாக வரலாற்றைக் கேலி செய்ய வேண்டாம் என ஸ்டாலின் அறிவுரை!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாடையைத் தொட்டுச் செய்த செய்கை மற்றும் திமுக மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், "வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்வராக முதல்முறை: அரசுமுறைப் பயணமாக இன்றிரவு லண்டன் புறப்படுகிறார் முதலமைச்சர் விஜய்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் விஜய் இன்றிரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




