சுவிஸ்: 17°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையில் ரூ.1 பில்லியன் டொலர் உண்டியல் மோசடி!

நிவேதினி•18 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் ரூ.1 பில்லியன் டொலர் உண்டியல் மோசடி!

இலங்கையில் ரூ.1 பில்லியன் டொலர் உண்டியல் மோசடி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் ரூ.1 பில்லியன் டொலர் உண்டியல் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது

இலங்கையில் எந்தவிதப் பொருட்களையும் நாட்டிற்குள் இறக்குமதி செய்யாமல், 'உண்டியல்' முறை மூலம் சட்டவிரோதமாகச் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ், நாட்டின் 4 பிரதான தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை, வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


வங்கிச் கிளைகளுக்குள்ளேயே வைத்து 4 வங்கி முகாமையாளர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நடவடிக்கை இலங்கை வரலாற்றில் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது.  


இந்தச் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற மோசடியுடன் தொடர்புடைய "ஜெப்ரி மொஹமட்" என்ற சந்தேகநபரின் கைதுக்குப் பிறகே, அதற்கு உடந்தையாகச் செயற்பட்ட இந்த வங்கி முகாமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


 இவ்விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
நிவேதினி

நிவேதினி

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் செய்தி ஆசிரியர். கலாச்சாரம், கலை, கல்வி மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க மிக அவதானமான நகர்வு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

7 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm