18 வயது பூர்த்தியடைந்த மேலும் 40 இலட்சம் பேருக்கு TIN இலக்கம் கட்டாயம்: பதிவாகும் அனைவரும் வரி செலுத்தத் தேவையில்லை!

18 வயது பூர்த்தியடைந்த மேலும் 40 இலட்சம் பேருக்கு TIN இலக்கம் கட்டாயம்: பதிவாகும் அனைவரும் வரி செலுத்தத் தேவையில்லை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுப் பதிய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 170 இலட்சம் பேரில், இதுவரை 130 இலட்சம் பேர் மட்டுமே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளதாகவும் ஆணையாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
சட்டப்படி 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் TIN இலக்கம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், பதியும் அனைவரும் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வரி முறையை முறைமைப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என்றும் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




