மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக நாளை வர்த்தமானியில் அறிவிப்பு!

மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக நாளை வர்த்தமானியில் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
"வனஸ்பதி" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக நாட்டின் மேலும் 20 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக நாளை (26) வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திகே தலைமையில் நுவரெலியா சதாத்தன்ன வனக் கல்லூரியில் (Sadhathenna Forestry College) இதற்கான விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்போது நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா மற்றும் அநுராதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைந்துள்ள சுமார் 9,538 ஹெக்டேயர் மொத்த நிலப்பரப்பைக் கொண்ட 20 காடுகளே இவ்வாறு வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகப் பிரகடனம் செய்யப்படவுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் சுற்றாடல் அமைச்சானது வனப்பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து இதுவரை 93 காடுகளைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானியில் அறிவித்துள்ளது.
நாளை வெளியிடப்படவுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து, இவ்வாட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மொத்த நிலப்பரப்பு சுமார் 65,000 ஹெக்டேயராக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!
இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




