சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் படகுடன் 7 பேர் கைது குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கை கடற்படையினால்,தேவேந்திரமுனைக்கு தெற்கே அமைந்துள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கொடியற்ற வெளிநாட்டுப் படகொன்றுடன் ஏழு வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வெளிநாட்டுப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காகதிக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் நிபுணத்துவ உதவியுடன், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் படகில் காணப்பட்ட போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூன்று பொதிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் சுமார் மூன்று கிலோகிராம் 670 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டுச் சந்தேகநபர்கள், வெளிநாட்டுப் படகு மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

YOGALINGAM DILAKSHIKA
செய்தியாளர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




