
இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79 மரணங்கள் பதிவாகியுள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, தற்போதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 103,565 ஆகும்.
அத்துடன், மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.19 சதவீதமானோர், 54,046 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் மட்டுமே பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட மட்டத்திலான புள்ளிவிபரங்களின்படி, அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 21,828 ஆகும்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!
இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.
பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!
மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




