மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
2026 ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் அவற்றை அமைச்சு மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
இலங்கை எதிர்கொண்டுள்ள அபாயங்களை அடையாளம் கண்டு, அவற்றைக் குறைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
மேலும், இந்த நடவடிக்கைகள் வெளித் தரப்பினரின் அழுத்தங்களுக்காக மேற்கொள்ளப்படுபவை அல்ல என்றும், நாட்டின் நிறுவன கட்டமைப்புக்கும் நாட்டின் நலனுக்கும் அவசியமான நடவடிக்கைகள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த மதிப்பீட்டு செயல்முறை தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் நிறுவப்பட்டுள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப இணக்கம், பரிந்துரைகள் மற்றும் செயற்றிறன் தொடர்பிலும் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தைச் செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வருதல், நிறுவனச் சட்டம் மற்றும் அதன் செயற்பாடுகள், நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் அல்லது தாமதங்களை உடனடியாகத் திருத்தி, எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அரசாங்கமும் நிறுவன கட்டமைப்பும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையின் சர்வதேச நிதிக் கட்டமைப்பில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டு செயல்முறையை வெற்றிகரமாக நிறைவேற்றுவது, நாட்டின் முக்கிய பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்காக அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிர பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் இந்தப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!
கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு: சங்குப்பிட்டி பாலத்தில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!
ஏ-32 பூநகரி - யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள முக்கிய இணைப்புப் பாலமான சங்குப்பிட்டி பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அடுத்த 5 நாட்களுக்குப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




