அனோஜனின் உயிரைப் பாதுகாக்க மிக அவதானமான நகர்வு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க மிக அவதானமான நகர்வு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞனான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மிக அவதானமாகவே முன்னெடுக்க வேண்டும். அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சவூதி மன்னருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள சிறப்புக் கோரிக்கைக் கடிதத்தை, பிரதி சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழுவொன்று நேரில் சென்று கையளிக்கவுள்ளது. எனத்தெரிவித்துள்ளார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




