"யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மாசுபாடு: பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்."

"யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்று மாசுபாடு: பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்." குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (18) காலை 7.30 அளவில் வெளியிடப்பட்ட காற்று தரச் சுட்டெண் (AQI) தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, வடமத்திய, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துக் காணப்படுகின்றது. எல்லை தாண்டிய காற்று சுழற்சியின் ஊடாக வளிமண்டலத்தில் கலந்துள்ள தூசுத் துணிக்கைகளே இதற்குப் பிரதான காரணம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். வெளிப்புறங்களில் காணப்படும் மங்கலான வானிலை சாதாரண பனிமூட்டம் அல்ல; மாறாக, காற்றில் மிதக்கும் தூசுத் துணிக்கைகளால் ஏற்படும் மாசுபாடாகும் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மோசமான காற்றுத் தரத்தினால் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் அல்லது தூசு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாருக்கேனும் சுவாசப் பிரச்சினைகளோ அல்லது ஒவ்வாமை அறிகுறிகளோ ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




