சுவிஸ்: 13°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள்: கடும் பதிலடி கொடுக்க ஈரான் உறுதி!

குரு•25 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள்: கடும் பதிலடி கொடுக்க ஈரான் உறுதி!

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள்: கடும் பதிலடி கொடுக்க ஈரான் உறுதி! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது.


 

 

அதேவேளையில், வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகளைத் தங்கள் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் எதிர்த்து நிற்பார்கள் என்றும் தெஹ்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கொட் பெசென்ட் திங்களன்று (24) புதிய நடவடிக்கைகளை அறிவித்தார்.

 

இருப்பினும், ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் டொலர் சார்ந்த நிதி அமைப்பிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்த அவர், மிகக் கடுமையான தடைகளை விதிப்பதிலிருந்து மட்டும் விலகி நின்றார்.

 

புதிய உத்தரவுக்கு இணங்குவதற்கு அவகாசம் அளிப்பதாகக் கூறிய பெசென்ட், எந்தெந்த நாடுகள் குறிவைக்கப்படும் என்பதையோ அல்லது தடைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதையோ தெரிவிக்க மறுத்துவிட்டார்.

 

இருப்பினும் வொஷிங்டனின் திறைசேரியத் திணைக்களம் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது புதிய தடைகளை அறிவித்தது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஈரானுக்கு எதிரான போர் தொடரும்! எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!

தான் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஈரானுக்கு எதிரானப் போர் தொடர்ந்து தீவிரமாகப் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - 7 வயது சிறுமி பரிதாப பலி!

காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ராணுவம் குறித்த போலி வீடியோ விவகாரம் - காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் கடும் கண்டனம்!

போலி வீடியோக்கள் மூலம் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm