சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிக்கும் முடிவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

VIGNESWARAN ABIRAMY•12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிக்கும் முடிவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிக்கும் முடிவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

மேல் மாகாணத்திற்குள் பயணிகள் பஸ்களுக்கான வழித்தட அனுமதிப்பத்திரத்தை மாதாந்தம் புதுப்பிக்கும் புதிய நடைமுறையினால், பஸ் தொழில்துறையினர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வந்த வழித்தட அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கும் நடைமுறையை, இம்மாதம் முதலாம் திகதி முதல் மாதாந்தம் மேற்கொள்வதற்கு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், வழித்தட அனுமதிப்பத்திரத்தை வருடாந்தம் புதுப்பிக்க வேண்டும் எனச் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது மீறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிச் சான்றிதழ் என்பன வருடத்திற்கொரு முறை வழங்கப்படுகின்ற நிலையில், வழித்தட அனுமதிப்பத்திரத்தை மட்டும் மாதாந்தம் புதுப்பிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது எனவும், இதனால் பஸ் உரிமையாளர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm