சுவிஸ்: 6°C
•
இலங்கை: 27°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

விமானப் போக்குவரத்துத் துறை மேம்பாடு மற்றும் பயணிகள் நலன்: இந்திய மத்திய அரசு புதிய விமான விதிகளுக்கு ஒப்புதல்!

VIGNESWARAN ABIRAMY•3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
விமானப் போக்குவரத்துத் துறை மேம்பாடு மற்றும் பயணிகள் நலன்: இந்திய மத்திய அரசு புதிய விமான விதிகளுக்கு ஒப்புதல்!

விமானப் போக்குவரத்துத் துறை மேம்பாடு மற்றும் பயணிகள் நலன்: இந்திய மத்திய அரசு புதிய விமான விதிகளுக்கு ஒப்புதல்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் வகையிலும், பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய அரசு புதிய விமான விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


 

1937-ஆம் ஆண்டைய பழமையான விதிகளுக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விதிகள், வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய 'பாரதிய வாயுயான் விதிகள் 2026' (Bharatiya Vayuyan Niyam) மூலம், விமானக் கட்டண நிர்ணயம் மற்றும் சேவைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படவுள்ளது.  

 

இந்தப் புதிய விதிகளின்படி, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அடிப்படை கட்டணம், அரசு வரிகள், கூடுதல் கட்டணங்கள், டிக்கெட் ரத்து செய்வதற்கான விபரங்கள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறைகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை விமான நிறுவனங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.  

 

மேலும், அவசர காலங்கள் அல்லது எதிர்பாராத அசாதாரண சூழ்நிலைகளின்போது விமானக் கட்டணம் கட்டுக்கடங்காமல் உயர்வதைத் தடுக்க, மத்திய அரசு தற்காலிகமாகக் தலையிட்டு கட்டணக் கட்டுப்பாடு விதிக்கவும் இந்தப் புதிய விதிகள் அதிகாரம் வழங்குகின்றன.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

ஆந்திராவில் 'முரசு' தீவிர சூறாவளிப் புயல் கரையைக் கடந்தது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள Ongole அருகே, இன்று (03) அதிகாலை Murasu தீவிர சூறாவளிப் புயல் கரையைக் கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வடகொரியா அதிரடி: பொலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான “வகை 2” கொத்துக் குண்டு சோதனை வெற்றி!

வடகொரியா தந்திரோபாய பொலிஸ்டிக் ஏவுகணைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள “வகை 2” கொத்துக் குண்டு வெடிபொருளை கடந்த சனிக்கிழமை (31) வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

ஹார்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் மோதியதால் வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இஸ்ரேலிய அரசியலில் திருப்பம்: நேதன்யாகுவின் அழைப்பை ஏற்பாரா ராணுவ முன்னாள் தளபதி காடி ஐசென்கோட்?

இஸ்ரேல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்த்தரப்பின் முக்கியத் தலைவரான காடி ஐசென்கோட்டின் ஆதரவைப் பெறப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm