பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 80 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பலி - எச்சரிக்கை விடுத்த அமைப்பு!

பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 80 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பலி - எச்சரிக்கை விடுத்த அமைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய அதிரடித் தாக்குதல்களில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்த இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களின் போது, ஏராளமான இராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன், சில முக்கியப் பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தற்காலிகமாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு எதிரான ராணுவ அடக்குமுறைகள் தொடர்ந்தால், எதிர்களிலும் இதுபோன்ற தீவிரத் தாக்குதல்கள் தொடரும் என பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
போப் லியோ XIV முழக்கம்: "மதத்தின் பெயரால் நடக்கும் போர் புனிதமல்ல; அமைதியே புனிதமானது!"
"மதத்தின் பெயரால் நடத்தப்படும் எந்தவொரு போரும் புனிதமானதாக இருக்க முடியாது; மனிதகுலத்தின் உண்மையான புனிதமானது அமைதி மட்டுமே" என திருத்தந்தை போப் லியோ XIV (Pope Leo XIV) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சூடானில் ராணுவ வான்வழித் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!
சூடானில் தெற்கு டார்பூர் மாகாணம் நயாலா நகரில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் ராணுவம் நடத்திய பயங்கரமான டிரோன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு!
புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் நாகரிகங்கள் குறித்த கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
'நிவாரணப் பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்': அர்னாப் புயல் குறித்து பவன் கல்யாண் அவசர ஆலோசனை!
ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தி வரும் 'அர்னாப்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, துணை முதல்வர் பவன் கல்யாண் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




