
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு: பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
புதுடெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் நாகரிகங்கள் குறித்த கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா விடுக்கும் முதல் அழைப்பு இது என்பதால் இராஜதந்திர ரீதியில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
எதிர்வரும் நவம்பர் 20 முதல் 22 வரை புதுடெல்லி புராணா கிலாவில் நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கவுள்ளார்.
இதில் பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அவ்ரங்கசீப் கான் கிச்சி உட்பட 10 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நாகரிகப் பிணைப்பு, கலாசார உறவுகள் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 80 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பலி - எச்சரிக்கை விடுத்த அமைப்பு!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய அதிரடித் தாக்குதல்களில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'நிவாரணப் பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்': அர்னாப் புயல் குறித்து பவன் கல்யாண் அவசர ஆலோசனை!
ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தி வரும் 'அர்னாப்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, துணை முதல்வர் பவன் கல்யாண் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
170க்கும் மேற்பட்ட பயணிகளைக் காப்பாற்றிய இந்திய பைலட்டுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உயரிய விருது வழங்கி கௌரவம்!
Flydubai விமானத்தில் பயணித்த 170க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைப் பாதுகாத்து சாதுரியமாகச் செயல்பட்ட இந்திய விமானியான கெப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு உயரிய விருதான வழங்கி கௌரவித்துள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல்: இன்று பரபரப்பான வாக்குப் பதிவு!
இஸ்ரேலில் இன்று (27) நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




