மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 15 வரை விளக்கமறியல் நீடிப்பு!
மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 15 வரை விளக்கமறியல் நீடிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
மட்டக்களப்பில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் என 3 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (01) காணொளி ஊடாக உத்தரவிட்டார்.
2025 ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட, “பிள்ளையான்” என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.நாட்காட்டியைத் தேர்ந்தெடுங்கள்
சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்து, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அச்சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
செந்தில் குமார்
முதன்மை ஆசிரியர் (Chief Editor)கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!
இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.
நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




