சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

ருவன்வெலிசாய முன்றலில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் – திடீர் பதற்றம்!

VIGNESWARAN ABIRAMY•12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
ருவன்வெலிசாய முன்றலில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் – திடீர் பதற்றம்!

ருவன்வெலிசாய முன்றலில் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் – திடீர் பதற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகளின் பகுதியில் பதற்றம்!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த பிக்குகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு ரஜங்கனயே சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஒக்டோபர் மாதம் விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் போது பொலிஸார் தம்மைத் தாக்கியதாகக் கஸ்ஸப தேரர் ஊடகங்களில் தெரிவித்த கருத்து தொடர்பான விசாரணைக்குச் சமுகமளிக்குமாறு அவருக்குக் காவல்துறை அறிவித்துள்ளது. முன்னதாக நேற்று ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமூகமளிக்காததால், நாளை (13) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு உடமலுவ பொலிஸார் மீண்டும் அறிவித்துள்ளனர்.

எனினும், தாம் எந்தவொரு நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றப் போவதில்லை எனவும், தமக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் 'சங்க நீதிமன்றத்துக்கு' மட்டுமே உண்டு எனவும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm