சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு!

VIGNESWARAN ABIRAMY•6 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெலவினால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, அவரை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

எனினும், குறித்த பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனமையால், முன்னாள் அமைச்சர் போகொல்லாகம மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியொன்றில் கலந்துகொண்டு, நிதி விதிமுறைகளுக்குப் புறம்பாக 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலுத்துமாறு முதலீட்டுச் சபையின் தலைவரைத் தூண்டி ஊழல் புரிந்ததாகக் குற்றம்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm