சுவிஸ்: 18°C
•
இலங்கை: 30°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ஜனாதிபதி அநுர தலைமையில் கலந்தாய்வு!

செந்தில் குமார்•19 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ஜனாதிபதி அநுர தலைமையில் கலந்தாய்வு!

கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ஜனாதிபதி அநுர தலைமையில் கலந்தாய்வு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் புதன்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


உலக வங்கியின் கடன் மற்றும் நிதியுதவியின் கீழ், மேல் மாகாண சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து கொழும்பு கோட்டைப் பகுதியை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. இதன் கீழ் 8 கவர்ச்சிகரமான சுற்றுலா வலயங்களை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யவும், முறையான போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் துறைமுகத்திற்கு வரும் சுற்றுலாக் கப்பல்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

 

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான முதற்கட்ட ஆய்வுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முறையான போக்குவரத்து ஆய்வு (Traffic Study) மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

 

இதன் முழுமையான திட்டத்தை தயார் செய்து, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபை இணைந்து மீண்டும் அது குறித்து கலந்துரையாடுமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார். மேலும், முழுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் போது அப்பகுதியில் உள்ள கால்வாய்களைப் புனரமைப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
செந்தில் குமார்

செந்தில் குமார்

முதன்மை ஆசிரியர் (Chief Editor)

கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் இயங்கி வருகிறார். சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

எவன்கார்ட் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்ய கோப் குழு தீர்மானம்!

இலங்கை கடற்படையுடன் இணைந்து 'ரக்னா அரக்ஷக லங்கா' பாதுகாப்பு நிறுவனம் முன்னெடுத்து வந்த கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தைச் சேர்த்துக் கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழு (கோப் குழு) தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டிற்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: சீனப் பிரஜைகள் இருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

நல்லூரடியில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் உருவச்சிலை, இன்று காலை பொலிஸாரால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாட்டில் பல இடங்களில் மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm