யூடியூப் பார்த்து கள்ளநோட்டு தயாரிப்பு – 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது!

யூடியூப் பார்த்து கள்ளநோட்டு தயாரிப்பு – 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கள்ளநோட்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டு, அவற்றைப் புழக்கத்தில் விட முயன்ற 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொண்ட்லி புஸ்தா பகுதியில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது, அவர்களிடமிருந்து 200 ரூபாய் மதிப்பிலான 920 போலி நோட்டுகள், மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஆயிரம் ரூபாய் அசல் பணமும் எண் பலகை இல்லாத காரும் கைப்பற்றப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், சிறையில் இருந்தபோது கள்ளநோட்டு தயாரிக்கும் திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படும் அர்ஜுன் சிங், ஜாமீனில் வெளியே வந்த பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இரண்டு லட்சம் ரூபாய் அசல் பணத்துக்குப் பதிலாக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகளை வழங்குவதாகக் கூறி மோசடி செய்ய முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
சுமி
செய்தி ஆசிரியர்அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சர்வதேசத் திரைப்படத் துறையில் தனது துணிச்சலான படைப்புகளால் அறியப்பட்ட புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க டெல்லி பேரணி – ராகுல் காந்தி அழைப்பு!
இந்தியாவில் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க, நவம்பர் முதலாம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
சேதமடைந்த அணு உலைகளைச் சீரமைக்காத ஈரான்! IAEA வெளியிட்ட முக்கிய தகவல்!
இராணுவத் தாக்குதல்களால் சேதமடைந்த தனது அணு உலைகளையோ அல்லது அணுசக்தி மையங்களையோ சீரமைப்பதற்கோ அல்லது மீண்டும் கட்டுவதற்கோ ஈரான் எந்தவித முயற்சியும் செய்யவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் கிராசி தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு ஆட்சியை வீழ்த்தத் திட்டம்! எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்க அரபுக்கட்சிகள் தயார்!
இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எதிர்க்கணிகளுக்கு ஆதரவளிக்க அரபுப் பிராந்தியக் கட்சிகள் முன்வந்துள்ளன.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




