தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாகவும், அது இன்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படும் என கடமைநேர வானிலை அதிகாரி மலீத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தத் தொகுதி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்வதால், இலங்கையை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால் நாட்டின் உட்புற வானிலையில் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். எினும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு மறு அறிவித்தல் வரை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் வானிலை சாதாரண இடைக்கால பருவக்காற்று பண்புகளையே காட்டுவதாகவும், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் பகல் வேளையில் உடல்வெப்பநிலை அதிகரித்து காணப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகலுக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




