
சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் – அமைச்சு எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறப்படும் போலி வாக்குறுதிகளை நம்பி, சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்லும் பல இலங்கையர்கள் தற்போது கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாகச் செல்வதால் உரிய சம்பளம் கிடைக்காமை, மனிதக் கடத்தல்களுக்கு இரையாகுதல், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுதல் மற்றும் கடவுச்சீட்டை இழத்தல் போன்ற பாரிய அபாயங்கள் ஏற்படுகின்றன.
எனவே, சுற்றுலா விசாவைத் தொழில் விசாவாக மாற்றித் தருவதாகக் கூறும் போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையாகப் பதிவுசெய்து சட்டப்பூர்வ வழிகளில் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லுமாறும் அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




