பொருளாதார அநீதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் மருத்துவர்கள்: நாளை கொழும்பில் GMOA கண்டனப் போராட்டம்!

பொருளாதார அநீதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் மருத்துவர்கள்: நாளை கொழும்பில் GMOA கண்டனப் போராட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (10) கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இருப்பினும், நாளை வைத்தியசாலை அமைப்பில் எந்தவித பணிப்புறக்கணிப்பும் இடம்பெறாது எனவும், அனைத்து வைத்தியர்களையும் கொழும்புக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்களின் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி இதற்கான தீர்வுகளை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




