சுவிஸ்: 10°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் அதிரடி திருப்பம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

VIGNESWARAN ABIRAMY•26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் அதிரடி திருப்பம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

தனியார் பள்ளிகள் அனுமதி விவகாரத்தில் அதிரடி திருப்பம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

தனியார் பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் வழங்குவதில் நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, இவ்வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், இந்த அதிரடி கைதாணை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அவரது இல்லங்களில் சோதனை நடத்தியிருந்ததுடன், அண்மையில் அமலாக்கத்துறையும் பணமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் இந்தக் கைது நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மிகத் தீவிர புயலாக வலுவடையும் ‘அர்னாப்’; தமிழகத்துக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் ஒன்று உருவாகியுள்ளது.இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) எதிர்வு கூறியுள்ளது.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

ஜெம் வீரமணி மீது 8-வது வழக்குப்பதிவு – 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி!

தமிழகத்தையே உலுக்கியுள்ள தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், தற்போது 8-ஆவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய 5 நபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதவாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

26 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரபல சமையல் கலைஞர் பத்மஸ்ரீ செஃப் தாமு மறைவு!

இந்தியச் சமையல் உலகிலும், சின்னத்திரையிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, தனது 72வது வயதில் இன்று காலை காலமானார்.

25 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றம் செய்வது தொடர்பாக பிரதமருக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் !

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (AAI) மாற்றி வேறு நிறுவனத்திடமோ அல்லது தனியார் வசமோ ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

23 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm