சுவிஸ்: 13°C
•
இலங்கை: 31°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

இலங்கையில் எல்-நினோ காலநிலைத் தாக்கம்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட மீளாய்வுக் கூட்டம்!

சுமி•21 ஆகஸ்ட், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
இலங்கையில் எல்-நினோ காலநிலைத் தாக்கம்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட மீளாய்வுக் கூட்டம்!

இலங்கையில் எல்-நினோ காலநிலைத் தாக்கம்: ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட மீளாய்வுக் கூட்டம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தற்போதைய எல்-நினோ நிலைமையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அவற்றைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் விநியோகம் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம், பெருந்தோட்டம், நன்னீர் மீன்பிடி, நீர் மற்றும் மின்சார விநியோகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டங்களைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.


பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் சிறிய குளங்களில் நீர்மட்டம் குறைவடையும் பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காணவும், நீர்வெட்டை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் மக்களுடன் கலந்துரையாடி முறையான திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
சுமி

சுமி

செய்தி ஆசிரியர்

அக்கினி செய்திகளின் சிறப்பு நிருபர் மற்றும் கட்டுரையாளர். சமூக அரசியல் மற்றும் சுவிஸ் தமிழ் விவகாரங்கள் குறித்து தொடர் ஆய்வுகள் எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

இலங்கையில் வறுமை இரட்டிப்பானதாக உலக வங்கி அறிவிப்பு!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் வறுமை நிலை இரட்டிப்பாக உயர்ந்ததாகவும், சுமார் 20 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பைத் தடுக்கும் சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை: கருணா அம்மானிடம் சிஐடி வாக்குமூலம்!

கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் திங்கட்கிழமை (5) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm