
இலங்கையில் ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை எதிர்பார்ப்பு ! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இலங்கையில் தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது .
இலங்கையில் தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது .
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன இது குறித்து குறிப்பிடுகையில்,
இலங்கையின் ஆண்டு மழைவீழ்ச்சியில் சுமார் 30 சதவீதம் இந்த இரண்டு மாதங்களில் பொதுவாகப் பெய்யும் என்றும், வழக்கத்தை விட கனமழையால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோவின் தாக்கங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமன்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கயல்
செய்தியாளர்அக்கினி செய்திகளின் சர்வதேச செய்தி நிருபர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள் (Related News)
மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!
இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.
பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!
மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!
ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




