
பிரபல எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் எம்பியுமான Jeffrey Archer காலமானார்.
அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த ஜெஃப்ரி ஆர்ச்சர், 'நொட் அ பென்னி மோர், நொட் அ பென்னி லெஸ்' (Not a Penny More, Not a Penny Less) என்ற தனது முதல் நாவல் மூலம் உலகளவில் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து அவர் எழுதிய 'கேன் அண்ட் ஏபல்' (Kane and Abel), 'ஃபர்ஸ்ட் அமங் ஈக்வல்ஸ்' (First Among Equals) போன்ற பல படைப்புகள் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தன.
சுவாரசியமான திருப்பங்கள் நிறைந்த நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மூலம் உலகின் பல்வேறு மொழிகளிலும் லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்த இவரது மறைவு, இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
இவரது மறை செய்தி அறிந்த உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்களும், இலக்கிய அமைப்புகளும், வாசகர்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
காங்கோவில் எபோலா தொற்று தீவிரம் – 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு; 2,320-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,320-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஹாரா பாலைவனத்தில் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரக விண்கல் கண்டுபிடிப்பு!
சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஒன்று, சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகப் பாறை என நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
GPS-க்கு மாற்றாக இந்தியாவின் நாவிக் தொழில்நுட்பம் – இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் வெற்றி!
இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நாவிக் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில், இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அவசரமில்லை – டிரம்ப்!
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




