சுவிஸ்: 12°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

பாம் எண்ணெய் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் சூழ்ச்சி: நுகர்வோர் இயக்கம் பகிரங்க எச்சரிக்கை!

VIGNESWARAN ABIRAMY•22 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
பாம் எண்ணெய் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் சூழ்ச்சி: நுகர்வோர் இயக்கம் பகிரங்க எச்சரிக்கை!

பாம் எண்ணெய் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் சூழ்ச்சி: நுகர்வோர் இயக்கம் பகிரங்க எச்சரிக்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையைத் திசைதிருப்பி, இலங்கைக்குப் பாம் எண்ணெய் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நாட்டில் உள்நாட்டுத் தெங்கு மற்றும் எண்ணெய் வித்து விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டுப் பனை எண்ணெய் இறக்குமதி மீது சில கடுமையான கட்டுப்பாடுகளும் தற்காலிகத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில வர்த்தக லாபநோக்கம் கொண்ட தரப்பினரின் தூண்டுதலின் பேரில், நிதி அமைச்சின் குறிப்பிட்ட அதிகாரிகள் குழுவொன்று தவறான தகவல்களை வழங்கி ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் திசைதிருப்பி வருகிறது."

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டால், அது இலங்கையின் உள்நாட்டுத் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் படுகுழியில் தள்ளும் என்று அந்த இயக்கம் எச்சரித்துள்ளது. குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பாம் எண்ணெய் சந்தையைக் கைபற்றுவதால், உள்நாட்டில் உற்பதியாகும் தேங்காய் எண்ணெய் மற்றும் தொடர்புடைய பொருட்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.

தேசிய பொருளாதாரத்தையும் நுகர்வோரின் நலனையும் பாதிக்கக் கூடிய இந்தச் சதி முயற்சியைக் கண்டறிந்து, இதற்கு உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகள் மீது ஜனாதிபதி உடனடியாகத் தகுந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும்,பாம் எண்ணெய் இறக்குடிக் கட்டுப்பாடுகளில் எந்தவொரு தளர்வையும் அனுமதிக்கக் கூடாது என்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

மாகாணசபைத் தேர்தல் முறை: நாடாளுமன்ற விசேட குழுவிடம் அரசியல் கட்சிகள் கருத்துச் சமர்ப்பிப்பு!

இலங்கை மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 வரை விளக்கமறியலில்!

மட்டக்களப்பில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவர் நவம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பு!

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - விவாதத்துக்கு திகதி நிர்ணயம்!

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹுங்கம மூவர் கொலை: பிரதான சந்தேகநபர் ‘அச்சினி’ டுபாயில் கைது!

ஹுங்கம பகுதியில் "கஜ்ஜா" என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான ‘அச்சினி’ என்ற அனோஷா லக்மாலி என்ற பெண் டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

27 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm