சுவிஸ்: 7°C
•
இலங்கை: 28°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
உலகம்

வரலாற்றில் முதல்முறை: இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் இந்திய விமானிக்கு அழைப்பு விடுத்துச் சிறப்பித்த பிரதமர் நெதன்யாகு!

VIGNESWARAN ABIRAMY•4 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
வரலாற்றில் முதல்முறை: இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் இந்திய விமானிக்கு அழைப்பு விடுத்துச் சிறப்பித்த பிரதமர் நெதன்யாகு!

வரலாற்றில் முதல்முறை: இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் இந்திய விமானிக்கு அழைப்பு விடுத்துச் சிறப்பித்த பிரதமர் நெதன்யாகு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இஸ்ரேல் வரலாற்றிலேயே முதல்முறையாக அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் ஜோதி ஏற்றி வைக்குமாறு, இந்தியாவைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் என்பவருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக அழைப்பு விடுத்து கௌரவித்துள்ளார்.

சமீபத்தில் டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் பறந்த ‘ப்ளைடுபாய்’ விமானத்தில், சக விமானி விமானத்தைக் கீழே மோதி விபத்துக்குள்ளாக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

காயமடைந்த நிலையிலும், அதீத தைரியத்துடனும், மன உறுதியுடனும் செயல்பட்ட இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார், பயணிகளின் உதவியோடு சக விமானியைக் கட்டுப்படுத்தி, விமானத்தைச் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இதன்மூலம் 174 பயணிகளின் உயிர்கள் தப்பியது.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

"நீங்கள் இஸ்ரேலின் கதாநாயகன் மட்டுமல்ல; இந்தியாவுக்கும், உலக முழுமைக்குமான மாபெரும் கதாநாயகன். ஆபத்தான சூழலில் உங்கள் திறமையாலும் சாதுரியத்தாலும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

வழக்கமாக இஸ்ரேல் நாட்டினருக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய கௌரவமான இஸ்ரேல் சுதந்திர தின ஜோதி ஏற்றும் நிகழ்வில் , வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கலந்துகொள்ளுமாறு கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் இந்த நிகழ்வுக்கு அழைப்பதாகத் தெரிவித்தார்.

விமானியின் இந்த அசாதாரண தைரியமான செயலைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய அரசு மற்றும் சவூதி அரேபியா தூதரகமும் அவரது ஆரோக்கிய நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்திய விமானி ஒருவருக்கு இஸ்ரேல் அரசு தன் நாட்டின் மிக உயரிய விழாவில் அளித்துள்ள இந்த கௌரவம், சர்வதேச அளவில் இந்தியாவுக்குக் கிடைத்தப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#உலகம்
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

காங்கோவில் எபோலா தொற்று தீவிரம் – 5 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு; 2,320-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,320-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

சஹாரா பாலைவனத்தில் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரக விண்கல் கண்டுபிடிப்பு!

சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஒன்று, சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகப் பாறை என நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

GPS-க்கு மாற்றாக இந்தியாவின் நாவிக் தொழில்நுட்பம் – இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் வெற்றி!

இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பான நாவிக் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் வகையில், இஸ்ரோவின் GSLV-F18 ராக்கெட் மூலம் NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அவசரமில்லை – டிரம்ப்!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm