சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவின் புதிய எரிபொருள் நிலையத்திற்குக் கடல் மார்க்கமாக எரிபொருள் விநியோகம்!

VIGNESWARAN ABIRAMY•26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு2
பகிர்க:WhatsAppFacebook
வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவின் புதிய எரிபொருள் நிலையத்திற்குக் கடல் மார்க்கமாக எரிபொருள் விநியோகம்!

வரலாற்றில் முதன்முறையாக நெடுந்தீவின் புதிய எரிபொருள் நிலையத்திற்குக் கடல் மார்க்கமாக எரிபொருள் விநியோகம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் வரலாற்றில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு, கடல் மார்க்கமாக எரிபொருள் விநியோகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில், டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஏற்றிய இரண்டு எரிபொருள் பவுசர் வாகனங்கள், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஊடாக நெடுந்தீவிற்கு கொண்டு செல்லப்பட்டு, புதிய எரிபொருள் நிலையத்தின் தாங்கிகளில் நிரப்பப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பல நோக்குக் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் அரச நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் நிலையத்தின் ஊடாக, பிரதேச மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக பெரும் போக்குவரத்துச் செலவுகளையும், கால விரயத்தையும் எதிர்கொண்டு வந்த நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு இதன் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm