தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் எல்லையைத் தாண்டியது இலங்கை!

தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் எல்லையைத் தாண்டியது இலங்கை! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
இந்த ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று நாட்டை வந்தடைந்துள்ளார்.ரஷ்ய நாட்டவரான இவருடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது தொடர்பாகத் தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் 20 இலட்சம் என்ற மைல்கல்லைத் தாண்ட முடிந்துள்ளதாகவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இதுவொரு விசேட வெற்றியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் இந்த 20 இலட்சம் என்ற எல்லை தாண்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுற்றுலாத்துறை தனது முன்னேற்றத்தைத் தொடர்ச்சியாகப் பேணி வருவது, நாட்டின் சுற்றுலாத்துறை மீது காணப்படும் சர்வதேச நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை சாதனையை இந்த 2026 ஆம் ஆண்டில் முறியடிப்பதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




