சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

நாடளாவிய ரீதியில் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச தேசிய பயிற்சித் திட்டம்: பிரதி அமைச்சர் அறிவிப்பு!

VIGNESWARAN ABIRAMY•6 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
நாடளாவிய ரீதியில் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச தேசிய பயிற்சித் திட்டம்: பிரதி அமைச்சர் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச தேசிய பயிற்சித் திட்டம்: பிரதி அமைச்சர் அறிவிப்பு! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு குறித்த பயிற்சியை இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எந்தவொரு முன்பள்ளி ஆசிரியரும் விடுபடாமல் இந்தப் பயிற்சியை முழுமையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இதற்காக தேசிய கல்வியியல் நிறுவனம் மற்றும் ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் பங்களிப்பும் பெறப்படுகிறது.

தேசிய பயிற்சி முறையின் கீழ் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், தேசிய மட்டத்திலான 108 முதன்மைப் பயிற்சியாளர்களையும், மாகாண மட்டத்திலான 556 பயிற்சியாளர்களையும் தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு முன்பள்ளி ஆசிரியருக்கு 10 நாட்கள் பயிற்சி காலம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது எட்டு மாகாணங்களில் இப் பயிற்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்திற்கான பயிற்சி திட்டம் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், சிறப்புத் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வித் தேவைகள் குறித்தும் இத்திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துதல், முறைசார்ந்த பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் ஆகியன இத்தேசிய திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
VIGNESWARAN ABIRAMY

VIGNESWARAN ABIRAMY

செய்தி ஆசிரியர்

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm