கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்!

கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்
கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீதிபதிகள் பயிற்சி நிறுவகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசருக்கு நீதவான் அனுப்பியிருந்த நிலையிலேயே, நீதிச்சேவைகள் ஆணைக்குழு இந்த இடமாற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஒரே சந்தேகநபருக்கு எதிராக ஒரே நாளில் போலி குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்த கம்பஹா பொலிஸாரைக் கண்டித்த நீதவான், நிரபராதிகளுக்கு எதிராக வீணாக வழக்குத் தொடர வேண்டாம் என பொலிஸாருக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எனினும், இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, நீதவான் சமர்ப்பித்த அவதானிப்புகளை பரிசீலித்த நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் இந்த இடமாற்றக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




