"ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி, 2 மாதக் குழந்தையுடன் கல் குகையிலிருந்து மீட்பு!"

"ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி, 2 மாதக் குழந்தையுடன் கல் குகையிலிருந்து மீட்பு!" குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதுச் சிறுமி ஒருவர், இரண்டு மாதக் கைக்குழந்தையுடன் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கல் குகை ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகில், உடுதும்புரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே, கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி ஒருவர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார். இது குறித்து உடுதும்புரை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றிலிருந்து, ஒருவருக்குத் தேவையானதை விட அதிகளவான அரிசியை நாளாந்தம் வாங்கிச் சென்ற இளைஞர் ஒருவர் மீது பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பின்தொடர்ந்து ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதிக்குள் சென்ற பொலிஸார், பிளாஸ்டிக் மற்றும் துணிகளால் மறைக்கப்பட்டிருந்த கல் குகை ஒன்றில், இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் குறித்த சிறுமி தங்கியிருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
அந்தக் கல் குகைக்குள்ளேயே குழந்தை பிரசவிக்கப்பட்டதும், கிதுல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தால் குழந்தையின் தொப்புள்கொடி அறுக்கப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞரும், அவருக்கு உடந்தையாக இருந்த 36 வயது உறவினரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியும் இரண்டு மாதப் பெண் குழந்தையும் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடுதும்புரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




