
ஜப்பானில் ஆரம்பமானது 'GLEC' சர்வதேச மாநாட்டுத் தொடர்: திலித் ஜயவீர பங்கேற்பு குறித்த பிரத்யேக ஒளிப்படம்
ஒரு நாடு அபிவிருத்தி அடைவதற்குத் தொழில்முனைவோர் சிந்தனை கொண்ட மக்களும், அத்தகைய தலைமையும் உருவாக வேண்டும் என 'உலகளாவிய இலங்கைத் தொழில்முனைவோர் ஒன்றியத்தின்' ஸ்தாபகர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோரை ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒன்றிணைக்கும் சர்வதேச மாநாட்டுத் தொடரை, ஜப்பானின் சுகுபா நகரில் நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் ஜப்பானில் வசிக்கும் பெருமளவிலான இலங்கைத் தொழில்முனைவோர் கலந்துகொண்டதுடன், நிகழ்வைத் தொடர்ந்து அவர்களுடன் திலித் ஜயவீர சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தொழில்முனைவோர், தொழில்வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு ஒரே இடத்தில் உலகளாவிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் நோக்கில், திலித் ஜயவீரவின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளம் அண்மையில் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இது குறித்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தொழில்முனைவோருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே, இந்த சர்வதேச மாநாட்டுத் தொடர் ஜப்பானிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIGNESWARAN ABIRAMY
செய்தி ஆசிரியர்தொடர்புடைய செய்திகள் (Related News)
சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!
சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!
இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு
நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்
இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்கள் (2)
கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!
சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.




