சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
இலங்கை

தனியார் பேருந்து பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப அறிமுகம்!

குரு•5 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
பகிர்க:WhatsAppFacebook
தனியார் பேருந்து பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப அறிமுகம்!

தனியார் பேருந்து பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப அறிமுகம்! குறித்த பிரத்யேக ஒளிப்படம்

நெடுந்தூர தனியார் பேருந்துகளின் பயணிகள் மற்றும் சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் வழிகாட்டலில், வீதிப் பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் ஒருங்கிணைப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் கீழும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் வைத்து நெடுந்தூர தனியார் பேருந்துகளில் தொழில்நுட்ப சாதனங்களைப் பொறுத்தும் பணிகள் இன்று (5) மேற்கொள்ளப்பட்டன.

 

ஆரம்பகட்டமாக 10 பேருந்துகளில் இந்த AI அமைப்புகள் பொருத்தப்படுவதுடன், அவற்றின் வெற்றி மற்றும் செயற்பாடுகளைக் கண்காணித்த பின்னர், நாடு முழுவதும் இயங்கும் ஏனைய பேருந்துகளுக்கும் இத்தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்:#அக்கினி செய்தி#இலங்கை
குரு

குரு

செய்தியாளர்

அக்கினி செய்திகளின் சிறப்பு கட்டுரையாளர். பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் உலக விவகாரங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள் (Related News)

சர்வதேச தேடுதல் அறிவிப்பில் 43 இலங்கை குற்றச் சந்தேகநபர்கள் – 17 பேர் துபாயில்!

சர்வதேச தேடுதல் அறிவிப்புகளின் கீழ் தேடப்பட்டு வரும் 43 இலங்கையர்களும் தற்போது எந்தெந்த நாடுகளில் வசிக்கின்றனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

டிசம்பர் 1 முதல் துறைமுக அணுகல் விரைவுச்சாலையில் வாகனக் கட்டுப்பாடு!

இலங்கையின் துறைமுக அணுகல் விரைவுச்சாலையைப் பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

28 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றது நவம்பர் மாத 'அஸ்வெசும' கொடுப்பனவு

நவம்பர் மாதத்திற்கான 'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இரத்தினபுரி பேருந்து - டிப்பர் விபத்து: 11 பேர் காயம்; ஐவர் கவலைக்கிடம்

இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கருத்துக்கள் (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கார்த்திக் கணேசன்
2 மணி நேரத்திற்கு முன்

மிகவும் அவசியமான மற்றும் பயனுள்ள செய்தி பதிவு. விவரமான தகவல்களுக்கு நன்றி!

சுரேஷ் குமார்
5 மணி நேரத்திற்கு முன்

அக்கினி செய்தியின் இந்த பகுப்பாய்வு சிறப்பாக உள்ளது. மேலும் பல விரிவான செய்திகளை எதிர்பார்க்கிறோம்.

Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm